

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (5.2.2026, வியாழக்கிழமை) மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடை செய்யப்படும் என்று கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை (5.2.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம், பேட்டை, மாவடிக்கால், குமந்தாபுரம், முத்துச்சாமிபுரம், வலசை, கருப்பாநதி, தார்க்காடு, போகநல்லூர், கண்மணியாபுரம், பாலஅருணாச்சலபுரம், கம்பனேரி, மங்களபுரம், அச்சம்பட்டி, பொய்கை, ஊர் மேல் அழகியான், வேலாயுதபுரம், இடைகால், சிவராம்பேட்டை, கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.