கள்ளக்குறிச்சி அருகே, ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கள்ளக்குறிச்சி அருகே ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கள்ளக்குறிச்சி அருகே, ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சியை அடுத்த மங்கலம் கிராம பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 43). ரவுடியான இவர் மீது மூங்கில்துறைப்பட்டு பகுதிகளில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரத்திற்கு முன்பு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக ஆறுமுகத்தை மூங்கில்துறைப்பட்டு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு கலெக்டர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மூங்கில்துறைப்பட்டு போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com