சேலம் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது

கொண்டலாம்பட்டி அருகே மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் அருகே மாணவியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் கைது
Published on

கொண்டலாம்பட்டி,

சேலம் அருகே உள்ள மல்லூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி, ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் குழாயில் தண்ணீர் பிடித்து வர குடத்துடன் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை கொண்டலாம்பட்டியில் உள்ள மல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், தனது மகளை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் தேங்கல்பாளையம் தட்டான்குட்டை புதூரைச் சேர்ந்த பழனிசாமியின் மகன் சுப்பிரமணி (வயது 22) என்பவர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அம்சவல்லி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த போலீசார் உடனே அந்த இடத்துக்கு சென்று சுப்பிரமணியை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மாணவியை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com