மோகனூர் காவிரி ஆற்று படித்துறையில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

மோகனூர் காவிரி ஆற்று படித்துறையில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
மோகனூர் காவிரி ஆற்று படித்துறையில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
Published on

மோகனூர்:

மோகனூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சிவன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படித்துறையில் சுமார் 45 முதல் 50 மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் உடல் கிடப்பதாக மோகனூர் கிராம நிர்வாக அலுவலர் அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவரின் இடது கையில் சுகந்தி, மோதிலால் எனவும், வலது கையில் சுவப்னா எனவும் ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது. இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

========

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com