பல ஆண்டுகளாக சொத்து வரி நிலுவை: ஓட்டல்கள், நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்

பல ஆண்டுகளாக சொத்து வரி, தொழில் வரி நிலுவையில் உள்ள ஓட்டல்கள், நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார்கள்.
பல ஆண்டுகளாக சொத்து வரி நிலுவை: ஓட்டல்கள், நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்
Published on

சொத்து வரி நிலுவை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் சொத்து வரி மற்றும் தொழில் வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 2 முறை வரி கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்தநிலையில் அண்ணாநகர் மண்டலத்துக்கு உட்பட்ட ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பல ஆண்டுகளாக லட்சக்கணக்கில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி மண்டல அதிகாரி உத்தரவின்பேரில் உதவி வருவாய் அதிகாரிகள், வரி மதிப்பீட்டாளர்கள் உள்ளடக்கிய அதிகாரிகள் குழு நேற்று மண்டலம் முழுவதும் தீவிர ஆய்வில் இறங்கினர்.

எச்சரிக்கை நோட்டீஸ்

ஓட்டல்கள், தனியார் ஆஸ்பத்திரிகள், கல்யாண மண்டபங்கள், பல்வேறு கடைகள் என சொத்துவரி நிலுவையில் உள்ள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் அந்த நிறுவனங்கள் முன்பாக வரி நிலுவையில் இருப்பதை குறிப்பிடும் வகையில் பேனர்கள் ஒட்டப்பட்டன. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சொத்து வரி செலுத்தாத பட்சத்தில் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையும் உதாசீனப்படுத்தி சொத்து வரி செலுத்தாத பட்சத்தில் அந்த நிறுவனங்கள் மூடப்படும். இன்னும் பல பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்றனர்.

மின் இணைப்பு துண்டிப்பு

அதேபோல் அம்பத்தூர் மண்டலத்தில் வருவாய் உதவி அலுவலர் சூரிய பானு தலைமையிலான அதிகாரிகள் பல லட்சம் ரூபாய் நிலுவை வைத்திருந்த திருமண மண்டபங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஷோரூம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கடைகள், திருமண மண்டபங்களின் மின்இணைப்பை துண்டித்தனர். இதுபோலவே சென்னை முழுவதும் அந்தந்த மாநகராட்சி மண்டலங்கள் சார்பில் சொத்துவரி நிலுவையில் உள்ள நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com