ரெயில்வேயின் துணை நிறுவனத்தில் 118 வேலை

ரெயில்வேயின் துணை நிறுவனமான இர்கான் நிறுவனத்தில் அதிகாரி பணியிடங்களுக்கு 112 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ரெயில்வேயின் துணை நிறுவனத்தில் 118 வேலை
Published on

சிவில் என்ஜினீயர்கள், டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

இந்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனம் இர்கான். பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இதில் தற்போது கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், துணை பொது மேலாளர், துணை மேலாளர் மற்றும் நிர்வாக அதிகாரி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 112 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. வயது வரம்பு சலுகை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

கல்வித்தகுதி:

பி.இ., பி.டெக் (சிவில்) பட்டப்படிப்பு படித்தவர்கள், சிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படு கிறார்கள்.

கட்டணம்:

சில பணிகளுக்கு ஆயிரம் ரூபாயும், சில பணிகளுக்கு ரூ.500-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து தேவையான சான்றுகள் நகல் இணைத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்கள் 5-4-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். சில பணிகளுக்கு நேர்காணல் 6-4-2017 அன்று நடைபெற உள்ளது. அதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ircon.org என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com