ஆட்டோவில் தவறவிட்ட பொருட்கள் திருப்பி ஒப்படைப்பு நேர்மையான டிரைவருக்கு பரிசு

ஆட்டோவில் தவறவிட்ட பொருட்கள் திருப்பி ஒப்படைப்பு நேர்மையான டிரைவருக்கு பரிசு.
ஆட்டோவில் தவறவிட்ட பொருட்கள் திருப்பி ஒப்படைப்பு நேர்மையான டிரைவருக்கு பரிசு
Published on

சென்னை,

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 27). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 2-ந்தேதி தனது ஆட்டோவில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெரினாவுக்கு 2 பேரை சவாரி அழைத்து சென்றார். மெரினாவில் ஆட்டோவை விட்டு இறங்கிய பயணிகள் இருவரும் தாங்கள் கொண்டு வந்த 2 பைகளை ஞாபக மறதியாக ஆட்டோவில் விட்டு சென்றனர்.

அதற்குள் பணம், செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இதை கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார், அதை பத்திரமாக ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஆட்டோவில் பைகளை தவற விட்டவர் பெயர் நிகில்ஜா (21). ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த இவர், சென்னையில் விமானப்படை பயிற்சி மையத்தில் ஏர்மேன் பயிற்சி பெற்றவர். தனது நண்பருடன் ஆட்டோவில் பயணித்தபோதுதான், அவர் கொண்டு வந்த பைகளை தவற விட்டார். அவரிடம் பைகள் இரண்டும் பத்திரமாக திருப்பி ஓப்படைக்கப்பட்டது.

ஆட்டோ டிரைவர் வினோத்குமாரின் நேர்மை பற்றி தெரிந்தவுடன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், அவரை நேரடியாக அழைத்து பாராட்டு தெரிவிக்கும்படி வடசென்னை இணை கமிஷனர் துரைக்குமாரை கேட்டுக்கொண்டார். அதன்படி அவர், வினோத்குமாரை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com