காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 6 பேர் கைது

காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம் அருகே மணல் கடத்தல்; 6 பேர் கைது
Published on

காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேடு பகுதியில் மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா சப்இன்ஸ்பெக்டர் கண்ணனுக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அவர் போலீசாருடன் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் மணல் கடத்துவது தெரியவந்தது.

இதையொட்டி காஞ்சீபுரத்தை அடுத்த செவிலிமேட்டை சேர்ந்த ஸ்ரீதர் (20) மற்றும் 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மாட்டுவண்டிகள் கைப்பற்றப்பட்டது.

காஞ்சீபுரத்தை அடுத்த கோளிவாக்கம் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வனுக்கு தகவல் வந்தது. அதையொட்டி அவர் போலீசாருடன் கோளிவாக்கம் பெருமாள் கோவில் தெரு பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு 3 மாட்டுவண்டிகளில் மணல் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையொட்டி கோளிவாக்கத்தை சேர்ந்த சங்கர் (47), பாஸ்கர் (42), காளமேகம் (49) ஆகியோரை போலீசார் கைது செய்து மாட்டுவண்டிகளை கைப்பற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com