105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

நெல்லையில் 105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
105 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
Published on

நெல்லை:

நெல்லை மாநகர கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் தனிப்படை போலீசாருக்கு, பாளையங்கோட்டை மிலிட்டரி கேன்டீன் சாலை அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையின் பின்புறத்தில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அதில் ரூ.51 ஆயிரத்து 532 மதிப்புள்ள, 105 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் மேலூரை சேர்ந்த முத்துச்செல்வம் (வயது 25), கண்ணையா (37), கீழநத்தம் தெற்கூரை சேர்ந்த மணிகண்டன் (22), டவுன் மகிழ்வண்ணநாதபுரம் தெருவை சேர்ந்த சங்கர் (51) ஆகியோர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் முத்துச்செல்வம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள், பணம், மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரூ.4 ஆயிரத்து 400 மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com