

தேனி:
தேனி அருகே உள்ள டொம்புச்சேரியை சேர்ந்தவர் விஜி (வயது 23). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர், 10-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார். இதனால் அந்த மாணவி கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் விஜி மீண்டும் அந்த மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜியை கைது செய்தனர்.