கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
கோத்தகிரி கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Published on

கோத்தகிரி

கோத்தகிரி டானிங்டனில் பிரசித்திப் பெற்ற கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி பங்குனி மாத அமாவாசை நாளையொட்டி கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன், கருப்புசாமி கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் மற்றும் பண்ணாரி மாரியம்மன் கோவில்களிலும் அமாவாசை சிறப்பு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com