உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூரில் உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை செய்துகாண்டார்.
உடலில் தீ வைத்து வாலிபர் தற்கொலை
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆக.27-

ஸ்ரீவில்லிபுத்தூர்- மதுரை ரோட்டில் உள்ள அங்கு ராஜ் நகரில் வசித்து வருபவர் விஜயமாறன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இளைய மகன் கோகுல் மாறன் (வயது 21) திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ள தனியார் திரையரங்கில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று இவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண் டார். உடனே தீயை அணைத்து அவரை குடும்பத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முதலுதவி சிகிச்சை முடிந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தந்தையிடம் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டதாக கோகுல் மாறன் கூறி உள்ளார். சிகிச்சையில் இருந்த கோகுல் மாறன் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com