காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருவெறும்பூர்,மார்ச்.19-
திருச்சி தென்னூர் சங்கீதாபுரம் 12-வது தெருவை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் லோகேஷ் குமார் (வயது 23). இவர் மெடிக்கலில் ஊழியராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் திருவெறும்பூர் அம்பேத்கர் நகரில் உள்ள தனது சகோதரி தீபிகா (25) என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் லோகேஷ்குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com