தைப்பூசம் திருவிழா: நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்

தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தைப்பூசம் திருவிழா: நெல்லை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் 30-ந் தேதி இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06001) மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு பிப்ரவரி 1-ந் தேதி இரவு 10.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06002) மறுநாள் காலை 9.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

இதேபோல், தாம்பரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் 31-ந் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06003) மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் தூத்துக்குடியில் இருந்து பிப்ரவரி 1-ந் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06004) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com