காஞ்சீபுரம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

காஞ்சீபுரத்தை அடுத்த பாக்குப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 27). கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாத ஏக்கத்தில் மனமுடைந்து காணப்பட்ட இவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சீபுரம் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

காஞ்சீபுரம்,

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

கீழ்கதிர்பூர்

காஞ்சீபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூர் பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன் (23). இவர் வேலையில்லாமல் இருந்தார். இந்த நிலையில் இவரை பெற்றோர்கள் வேலைக்கு செல்லுமாறு கூறினார்கள். இதனால் மனமுடைந்த அவர் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் நெப்போலியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com