கடனை திருப்பி தராததால் பெண் டிரைவரை கொலை செய்த தோழி கைது- உடந்தையாக இருந்த கணவரும் கைது

கடனை திரும்பி தராததால் பெண் டிரைவரை கொலை செய்த தோழியை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த தோழியின் கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

நாக்பூர்,

கடனை திரும்பி தராததால் பெண் டிரைவரை கொலை செய்த தோழியை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த தோழியின் கணவரையும் போலீசார் கைது செய்தனர்.

உடல் மீட்பு

நாக்பூரில் உள்ள கபில் நகர் பகுதியை சேர்ந்த பெண் தீபா ஜூகல் தாஸ்(வயது 41). இவர் பள்ளி பஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் காணாமல் போனார். இதுகுறித்து குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் அவரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்று உப்பல்வடி பகுதியில் பிளாஸ்டிக் பையில் பெண் பிணம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், அந்த உடல் காணாமல் போன தீபா ஜூகல் என தெரியவந்தது.

தோழியிடம் விசாரணை

இதையடுத்து போலீசார் இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இதில் தீபா கடைசியாக தனது தோழியான சுவர்ணா சோனி(வயது 30) என்பவரின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. அவரின் செல்போன் சிக்னலும் கடைசியாக அங்குதான் பதிவாகி இருந்தது.

எனவே போலீசார் சந்தேகத்தின் பேரில் சுவர்ணா சோனியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வாங்கிய கடனை திரும்பி தராததால் அவர் தான் தீபா ஜூகல் தாசை கொலை செய்தார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

கழுத்தை நெரித்து கொலை

தீபா ஜூகல் தாஸ் தனது தோழியிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். நீண்ட நாட்களாக அதை திரும்பி தராததால் சம்பவத்துன்று வீட்டிற்கு அழைத்து அந்த பணத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுவர்ணா சோனி தனது தோழியை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

இதைதொடர்ந்து சுவர்னா சோனி தனது கணவர் சாமி சோனி உதவியுடன் திபா ஜூகல் தாசின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைத்து உப்பல்வடி பகுதியில் உள்ள புதரில் வீசி சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கணவர், மனைவி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 2 பேரையும் வருகிற 31-ந் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com