காரைக்குடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்

காரைக்குடி அண்ணாநகர் நாவலர் தெரு பகுதியில் சுமார் 7 வீடுகள்
காரைக்குடியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம்
Published on

காரைக்குடி,

காரைக்குடி அண்ணாநகர் நாவலர் தெரு பகுதியில் சுமார் 7 வீடுகள் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது. இந்த வீடுகளை அகற்றுவதற்கு மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி நேற்று காலை காரைக்குடி தாசில்தார் கண்ணன் தலைமையில், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) ரெங்கராஜ், நகர் அமைப்பு அலுவலர் பெரியசாமி உள்ளிட்ட அலுவலர்கள் ஜே.சி.பி. எந்திரத்துடன் சென்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றனர்.

அப்போது அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. வாகனம் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த அவர்கள், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற கால அவகாசம் வேண்டும் என்று கேட்டனர். இதன்பின்னர் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற 3ந்தேதி வரை கால அவகாசம் தருவதாக தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com