கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு, பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு
Published on

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் தலைமையில் சட்டமன்ற குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, வேப்பனப்பள்ளி முருகன், ஏற்காடு சித்ரா, காங்கேயம் தனியரசு, பர்கூர் ராஜேந்திரன் மற்றும் சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் சாந்தி, துணை செயலாளர் கருணாநிதி, மாவட்ட கலெக்டர் பிரபாகர் ஆகியோர் பல்வேறு துறைகளின் கீழ் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்படி ராயக்கோட்டை பஸ் நிலையம் வணிக கடைகள் கட்டுமான பணி, சூளகிரியில் கட்டப்பட்டு வரும் தாசில்தார் அலுவலக கட்டுமான பணி, பார்த்தகோட்டாவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பால பணி, காமன்தொட்டி - ஆழியாளம் இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர்.

மேலும் காமன்தொட்டியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு என மொத்தம் ரூ. 12 கோடியே 35 லட்சம் மதிப்பில் நடந்து வரும் பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் (பொறுப்பு) உமாமகேஸ்வரி, உதவி கலெக்டர்கள் சரவணன், விமல்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மோகன்விஜயகுமார் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com