வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 21). இவரை தருவைகுளம் போலீசார் வழிப்பறி வழக்கில் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். தொடர்ந்து இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.

அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நந்தகுமாரை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த தாண்டவம், பாளையங்கோட்டை ஜெயில் அதிகாரிகளிடம் வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com