வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Published on

வந்தவாசி,

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தவாசி தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மின்சார மசோதாவை திரும்பப் பெற வேண்டும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை நீக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மாதம் ரூ.7,500 நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும், கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் தினமும் ஊதியமாக ரூ.700-க்கு குறையாமல் 200 நாட்களுக்கு வேலை அளிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதிய முறையை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் சங்க தலைவர் அரிதாசு, விவசாய சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து மண்டல பொருளாளர் முரளி, உதயகுமார், முத்துகருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com