திருநெல்வேலி: வடக்குபச்சையாறு அணையில் நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு

நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து நாளை முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி: வடக்குபச்சையாறு அணையில் நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு
Published on

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு அணையில் இருந்து நாளை முதல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், வடக்குபச்சையாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 6.2.2026 முதல் 31.3.2026 வரை 54 நாட்களுக்கு 51.06 மி.க.அடிக்கு மிகாமல் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்திலுள்ள பத்தை, மஞ்சுவிளை, களக்காடு, பத்மநேரி, வடமலைசமுத்திரம், சூரன்குடி, கடம்போடுவாழ்வு மற்றும் நான்குநேரி ஆகிய கிராமங்களிலுள்ள 1276.39 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com