100 நாள் வேலையை பாரபட்சமின்றி வழங்கக்கோரி ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம்

100 நாள் வேலையை பாரபட்சமின்றி வழங்கக்கோரி ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
100 நாள் வேலையை பாரபட்சமின்றி வழங்கக்கோரி ஆலவயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் போராட்டம்
Published on

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலவயல் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 210 பயனாளிகள் வேலை செய்து வந்தநிலையில், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு வேலை மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், பாரபட்சமின்றி அனைவருக்கும் வேலை வழங்கக்கோரியும் தொழிலாளர்கள் சிலர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம், ஊராட்சி செயலர் பேச்சுவார்த்தை நடத்தி கொரோனா காலம் முடிந்தவுடன் அனைவருக்கும் வேலை வழங்கப்படும். அதுவரை பணியை நிறுத்தி வைப்பதாக கூறியதை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com