பெண்களிடம் செல்போன் பறித்து வந்த புதுமாப்பிள்ளை நண்பருடன் கைது

பெண்களிடம் செல்போன் பறித்து வந்த புதுமாப்பிள்ளை நண்பருடன் கைது செய்யப்பட்டார்.
பெண்களிடம் செல்போன் பறித்து வந்த புதுமாப்பிள்ளை நண்பருடன் கைது
Published on

மும்பை, மும்பை செம்பூர் அமா மஹால் ஜங்ஷன் பகுதியில் சம்பவத்தன்று காலை 9 மணியளவில் பெண் ஒருவர் மகளுடன் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பெண்ணின் கையில் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பிச்சென்றனர். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் திலக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது பெண்ணிடம் செல்போன் பறித்தது கோவண்டி சிவாஜி நகர் பகுதியை சேர்ந்த அஜய் சுனில் மற்றும் அவரது நண்பர் அல்தாப் மிஸ்ரா என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் பெண்களை குறிவைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவத்தன்று அஜய் சுனிலை கைது செய்ய அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது திருமணம் முடிந்து, அஜய் சுனில் மணக்கோலத்தில் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் செல்வதற்கு சற்று நேரத்திற்கு முன்பு தான் அவருக்கு திருமணம் நடந்து முடிந்து இருந்தது. எனினும் போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை அஜய் சுனிலையும், அவரது நண்பர் அல்தாப் மிஸ்ராவையும் அதிரடியாக கைது செய்தனர்.

திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவத்தால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com