நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது: 4.5 கிலோ பறிமுதல்

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர்.
நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்றவர் கைது: 4.5 கிலோ பறிமுதல்
Published on

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், ஆமின்புரம் 12வது தெரு பகுதியில் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதிசங்கர் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.

அப்போது அப்பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட மேலப்பாளையம் ஆமின்புரம், தெற்கு தெருவை சேர்ந்த முகமதுமஸ்தான் மகன் முகமதுஷேக் (வயது 42) என்பவரிடமிருந்து சுமார் 4.5 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் முகமதுஷேக் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com