மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை; நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை; நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் கைது
Published on

பெங்களூரு:

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் 2 பேரும் நைஜீரியாவை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. நைஜீரியாவில் இருந்து தொழில் தொடர்பான விசாவில் 2 பேரும் இந்தியாவுக்கு வந்திருந்தனர். விசா முடிந்த பின்பு பெங்களூரு மற்றும் மும்பையில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததுடன், மும்பையில் இருந்து குறைந்த விலைக்கு எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை வாங்கி வந்து பெங்களூருவில் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு 2 பேரும் விற்று வந்துள்ளனர்.

அதுபோல், பானசாவடி பகுதியில் 2 பேரும் போதைப்பொருட்களை விற்று கொண்டு இருந்த போது மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் 2 பேரும் சிக்கி இருந்தனர். ஏற்கனவே போதைப்பொருட்கள் விற்றதாக பெங்களூரு காடுகோடி, இந்திராநகர் போலீஸ் நிலையங்களில் 2 பேர் மீதும் வழக்குப்பதிவாகி இருந்தது. கைதான 2 பேரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான என்.டி.எம்.ஏ. போதைப்பொருட்கள், 2 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com