காரில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது

கருங்கல் அருகே காரில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காரில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
Published on

திங்கள்சந்தை,


குமரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை போலீசார் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை கருங்கல் அருகே பள்ளியாடி பகுதியில் சப்இன்ஸ்பெக்டர் சணல்குமார் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர்.

காருக்குள் ஏராளமான சாக்குமூடைகள் இருந்தது. அந்த காரை பிரித்து பார்த்ததில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து காரில் இருந்த 2 பேரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் இருவரும் தக்கலையை சேர்ந்த சுரேஷ், கருங்கலை சேர்ந்த சுவாமிதாஸ் என்பதும், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com