குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

வாய்மேடு அருகே குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

வாய்மேடு,

வாய்மேடு அருகே மருதூர் தெற்கு ஆண்டியப்பன் காடு பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது40). லாரி டிரைவர். இவருடைய மனைவி ரம்யா(39). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று ரம்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரம்யாவின் உடலை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com