

குலசேகரம்:
குலசேகரம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிளின் (வயது 38). இவர் தூத்துக்குடி துறைமுகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஷோபா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
பிராங்கிளின் ஈஞ்சக்கோட்டில் புதிய வீடு ஒன்றை கட்டினார். இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், கடந்த சில நாட்களாக பிராங்கிளின் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார். இதன்காரணமாக மதுகுடிக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பிராங்கிளின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு குடும்பத்தினர் கதறி அழுதனர்.
பின்னர், இதுபற்றி பிராங்கிளின் மனைவி ஷோபா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிராங்கிளினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.