ஆரணியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

ஆரணிரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆரணியில் ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி
Published on

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிரோடு ரெயில் நிலைய பகுதி தண்டவாளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் பரவியது.

தகவலை கேள்விப்பட்டு களம்பூர் நால்வர் தெருவச் சேர்ந்த சாவித்திரி என்பவர் சென்று பார்த்தார். ரெயிலில் அடிபட்டு பலியானவர் தனது கணவர் ராஜாராமன் (வயது 50) என்பதை உறுதி செய்து கதறினார்.

நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து காட்பாடிய நோக்கி சென்ற சரக்கு ரெயிலில் ராஜாராமன் அடிபட்டு தலை நசுங்கி பலியானதாக தெரிய வருகிறது.

காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

களம்பூர் நால்வர் தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான அவர் கடந்த 10 நாட்களாக வீட்டுக்கு வராமல் சுற்றித்திரிந்தார்.

அவரை, குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. ஆரணிரோடு ரெயில் நிலையத்தில் ரெயிலில் அடிபட்டு பலியாகியது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com