

திருப்பத்தூர்,
திருப்பத்தூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆரிப் நகரில் சீமை கருவேல மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியை திருப்பத்தூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.முருகன் தலைமையில், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.ஜோதி, மாஜிஸ்திரேட்டுகள் என்.மோகன்ராஜ், சுமித்ரா, ராஜசேகர், திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தாசில்தார் நரசிம்மன், நகர அமைப்பு அலுவலர் ரவிந்திரன், மணி, அன்பரசு உள்பட பலர் உடனிருந்தனர்.