புதுக்கோட்டை அருகே துணை மின்நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் சாவு

புதுக்கோட்டை அருகே துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை அருகே துணை மின்நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஊழியர் சாவு
Published on

புதுக்கோட்டை:

ஊழியர்

புதுக்கோட்டை அருகே காவேரி நகர் பகுதியில் சத்தியமூர்த்தி காலனியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 55). இவர் புதுக்கோட்டை அருகே உள்ள சிப்காட் துணை மின் நிலையத்தில் ஆக்க முகவராக (போர் மேன்) பணியாற்றி வந்தார். கடந்த 6-ந் தேதி பணியில் இருந்த போது துணை மின் நிலையத்தில் தாழ்வழுத்த மின்கம்பத்தில் ஏறி வேலை பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் அவர் மீது பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ஜெய்சங்கர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் பணியிடை நீக்கம்

இதற்கிடையில் பணியின் போது கவனக்குறைவாக இருந்ததாக உதவி மின் செயற்பொறியாளர்கள் ரகுநாதன், ஜெகநாதன் ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் சேகர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி அவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சார ஊழியர் இறந்தது சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com