கம்பெனி செகரட்டரி படிப்புகள்..எங்கே படிக்கலாம்? வேலை வாய்ப்புகள் எப்படி?

ஒரு நிறுவனத்தில் திறமையான நிர்வாகம் அமைவதற்கு அடிப்படை காரணமாக அமைந்து ,முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்பவர், அந்த நிறுவனத்தின் கம்பெனி செகரட்டரிதான்
"கம்பெனி செகரட்டரி"(COMPANY SECRETARY) என அழைக்கப்படும் "நிறுவன செயலர்" பதவி ஒரு நிறுவனத்திலுள்ள மிக உயர்ந்த பதவியாகும் .நிர்வாகப் பொறுப்பிலுள்ள சிறந்த பதவியான "கம்பெனி செக்ரட்டரி" என்னும் இந்த பதவி அரசு ,தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் மிகச்சிறந்த பதவியாக கருதப்படுகிறது .இந்த பதவியை மேலை நாடுகளில் "கார்ப்பரேட் செக்கரட்டரி "(CORPORATE SECRETARY)என அழைக்கிறார்கள்.
பணிகள் பலவிதம்
ஒரு நிறுவனத்தில் திறமையான நிர்வாகம் அமைவதற்கு அடிப்படை காரணமாக அமைந்து ,முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்பவர், அந்த நிறுவனத்தின் கம்பெனி செகரட்டரிதான் .குறிப்பாக, நிறுவனத்தின் சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தும் நெறிமுறைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை நிறுவனத்தின் இயக்குனர்கள் மேற்கொள்வதற்கும் ,அதனை நடைமுறைப்படுத்தவும் உறுதுணையாக இருப்பவர் கம்பெனி செகரட்டரி.
முக்கிய பொறுப்புகள்.
நிறுவனத்திலுள்ள உயர்ந்த பொறுப்புகளான நிர்வாக அமைப்பு முறை, நிறுவனத்தை சீரமைத்தல், இயக்குனர் குழு கூட்டங்களை நடத்துதல் ,நிறுவனம் தொடர்பான முக்கிய முடிவுகளை மேற்கொள்ள இயக்குனர்களுக்கு உறுதுணையாக இருத்தல், பங்குதாரர்கள் (SHAREHOLDERS) அல்லது அறக்கட்டளை உறுப்பினர்கள்(TRUSTEES ) ஆகியோருக்கு அறிக்கைகள் அனுப்புதல் ஆகியவை ஒரு கம்பெனி செகரட்டரியின் முக்கிய பணிகள் ஆகும்.
மேலும் ,பணியாளர்களின் நலன்களான ஓய்வூதியம் ,காப்பீடு, ஒப்பந்தங்கள் ,இடர் மேலாண்மை(RISK MANAGEMENT) , சொத்துக்களை நிர்வகித்தல் மற்றும் நிதிக்கணக்கு (FINANCIAL ACCOUNTS) குறித்து விளக்கங்களை உருவாக்குதல் போன்றவையும் இவரது பணிகள் ஆகும்.
சில முக்கிய பணிகள்.
1. கார்ப்பரேட் கவர்மெண்ட்ஸ் அண்ட் செக்ரட்டீரியல் சர்வீசஸ் (CORPORATE GOVERNANCE AND SECRETARIAL SERVICES).
· கார்ப்பரேட் கவர்னன்ஸ் சர்வீசஸ்(CORPORATE GOVERNANCE SERVICES )
· கார்ப்பரேட் செக்ரட்டியரியல் சர்வீசஸ்( CORPORATE SECRETARIAL SERVICES)
· செகரட்டிரீரியல்/ காம்ப்பிளையன்ஸ் ஆடிட் அண்ட் சர்டிபிகேஷன் சர்வீசஸ்(SECRETARIAL/COMPLIANCE AUDIT AND CERTIFICATION SERVICES).
2. கார்ப்பரேட் லாஸ் அட்வைஸரி அண்ட் ரெப்பிரசன்டேஷன் சர்வீசஸ் (CORPORATE LAWS ADVISORY AND REPRESENTATION SERVICES).
· கார்ப்பரேட் லாஸ் அட்வைஸரி சர்வீசஸ். (CORPORATE LAWS ADVISORY SERVICES).
· ரெப்ரசன்டேஷன் சர்வீசஸ் ( REPRESENTATION SERVICES).
· ஆர்பிட்ரேஷன் அண்ட் கன்சிலிகேஷன் சர்வீசஸ் (ARBITRATION AND CONCILIATION SERVICES)
3. பைனான்சியல் மார்க்கெட் சர்வீசஸ் (FINANCIAL MARKET SERVICES)
· பப்ளிக் இஸ்யூ , லிஸ்டிங் அண்ட் செக்யூரிட்டிஸ் மேனேஜ்மென்ட் (PUBLIC ISSUE, LISTING AND SECURITIES MANAGEMENT)
· டேக் ஓவர் கோடு, இன்சைடர் டிரேடிங் , மெர்ஜர்ஸ் அண்ட் அமால்கமேசன் (TAKEOVER CODE, INSIDER TRADING, MERGERS AND AMALGAMATION)
· செக்யூரிட்டிஸ் காம்ப்லென்ஸ் அண்ட் சர்டிபிகேஷன் சர்வீசஸ். ( SECURITY COMPLIANCE AND CERTIFICATION SERVICES)
· பைனான்ஸ் அண்ட் அக்கவுண்டிங் சர்வீசஸ் (FINANCE AND ACCOUNTING SERVICES)
· டேக்சேஷன் சர்வீசஸ் (TAXATION SERVICES)
· இன்டர்நேஷனல் ட்ரேட் அண்ட் WTO சர்வீசஸ்.(INTERNATIONAL TRADE AND WTO SERVICES)
4. மேனேஜ்மெண்ட் சர்வீசஸ் (MANAGEMENT SERVICES)
· ஜெனரல் ஸ்டேட்டர்ஜிக் மேனேஜ்மென்ட் (GENERAL STRATEGIC MANAGEMENT)
· கார்ப்பரேட் கம்யூனிகேஷன் அண்ட் பப்ளிக் ரிலேஷன் (CORPORATE COMMUNICATION AND PUBLIC RELATIONS)
· ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட் (HUMAN RESOURCE MANAGEMENT)
· இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி(INFORMATION TECHNOLOGY)
கம்பெனி செகரட்டரி படித்தவர்களுக்கு முக்கியமான பல பணிகள் நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. குறிப்பாக,
· கம்பெனி செகரட்டரி (COMPANY SECRETARY)
· மேலாண்மை இயக்குனர் (MANAGING DIRECTOR),
· தலைமைச் செயல் அலுவலர்(CHIEF EXECUTIVE OFFICER)(CEO),
· மேலாளர் (மேனேஜர்),
· முழு நர இயக்குனர் ( WHOLE TIME DIRECTOR),
· தலைமை நிதி அலுவலர்(CHIEF FINANCIAL OFFICER)
-போன்ற உயர் பணிகள் கிடைக்க நல்ல வாய்ப்புகள் உள்ளன.
ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மூலதனம் கொண்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களும், எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் (PUBLIC SECTOR ORGANISATIONS) முழு நேரமாக மேலாண்மை பணிகளை கவனிக்க "முக்கிய மேலாண்மை பணியாளரை"( KEY MANAGERIAL PERSONNEL)நியமிக்க வேண்டியது கட்டாயமாகும் .எனவே கம்பெனி செகரட்டரிபடித்தவர்களுக்கு இந்த பணி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
இந்தியாவில் 10 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் பங்கு மூலதனம் கொண்ட பொதுத்துறை நிறுவனங்கள் கண்டிப்பாக தகுதி வாய்ந்த கம்பெனி செக்ரட்டரி ஒருவரை நியமனம் செய்ய வேண்டும் என்பது சட்டமாகும்.
கம்பெனி செக்ரட்டரி படிப்பு மூன்று வருட படிப்பாகும். இந்த மூன்று வருட படிப்பில் ஒரு நிறுவனத்தை அல்லது அமைப்பை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் குறிப்பாக சட்டபூர்வமாக எப்படி வழி நடத்த வேண்டும் என்பதைப் பற்றிய பயிற்சியை இந்த படிப்பு வழங்குகிறது
இந்த படிப்பு,
1. கம்பெனி செகரட்டரி எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (அல்லது) சி.எஸ். இ .இ .டி) (EXECUTIVE ENTRANCE TEST (CSEET) )
2.எக்ஸிக்யூட்டிவ் ப்ரோக்ராம் (EXECUTIVE PROGRAMME)
3.ப்ரொபஷனல் ப்ரோக்ராம் (PROFESIONAL PROGRAMME) - என 3 நிலைகளைக் கொண்டது.
மேலும் எக்ஸிக்யூட்டிவ் ப்ரோக்ராம் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே ப்ரொபஷனல் ப்ரோக்ராம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.இந்த மூன்று தேர்வுகளையும் எழுதி வெற்றி பெற்றவர்கள் மட்டுமே கம்பெனி செக்ரட்டரி என அழைக்கப்படுவார்கள்.
1.கம்பெனி செகரட்டரி எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட் (அல்லது) சி.எஸ். இ .இ .டி) (EXECUTIVE ENTRANCE TEST (CSEET) )
கம்பெனி செகரேட்டரி எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட் என்பது அடிப்படை நிலை தேர்வாகும். முன்பு இதனை பவுண்டேஷன் ப்ரோக்ராம் (FOUNDATION PROGRAMME)என அழைத்தார்கள். இந்தத் தேர்வை சி. எஸ் .இ .இ .டி என்றும் அழைப்பார்கள்.
பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களும் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் இந்த தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
கம்பெனி செகரட்டரி எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட். தேர்வில் ,
1 .BUSINESS COMMUNICATION
2. FUNDAMENTALS OF ACCOUNTING
3. ECONOMIC AND BUSINESS ENVIRONMENT
4. BUSINESS LAWS AND MANAGEMENT -என நான்கு பாடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் எக்ஸிக்யூட்டி ப்ரோக்ராம் (EXECUTIVE PROGRAMME) என்னும் அடுத்த நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
2.எக்ஸிக்யூட்டிவ் ப்ரோக்ராம் (EXECUTIVE PROGRAMME)
கம்பெனி செகரட்டரி எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட் என்னும் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், “எக்ஸிக்யூட்டிவ் ப்ரோக்ராம்” தேர்வு எழுத தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.
ஆனால், பட்டப்படிப்பு முடித்தவர்கள் (DEGREE COURSE) எக்ஸிக்யூட்டிவ் ப்ரோக்ராம் (EXECUTIVE PROGRAMME) படிப்பில் நேரடியாக சேர்ந்து படிக்கலாம். இவர்கள் “கம்பெனி செகரட்டரி எக்ஸிக்யூட்டிவ் என்ட்ரன்ஸ் டெஸ்ட் “எழுத வேண்டிய அவசியம் இல்லை.
இந்த தேர்வில், குரூப்- 1 குரூப்- 2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளில் இடம்பெறும் பாடங்கள் பற்றிய விபரம்.
GROUP 1
PAPER 1
JURISPRUDENCE, INTERPRETATION AND GENERAL LAWS
PAPER 2
COMPANY LAW AND PRACTICE
PART I – COMPANY LAW, PRINCIPLES AND CONCEPTS (60 MARKS)
PART II – COMPANY ADMINISTRATION AND MEETINGS (40 MARKS)
PAPER 3
SETTING UP OF BUSINESS, INDUSTRIAL AND LABOUR LAWS
PART I - SETTING UP OF BUSINESS (60 MARKS)
PART II - INDUSTRIAL AND LABOUR LAWS (40 MARKS)
PAPER 4
CORPORATE ACCOUNTING AND FINANCIAL MANAGEMENT
PART I - CORPORATE ACCOUNTING (60 MARKS)
PART II - FINANCIAL MANAGEMENT (40 MARKS)
GROUP 2
PAPER 5
CAPITAL MARKET AND SECURITIES LAWS
PART I - CAPITAL MARKET (40 MARKS)
PART II - SECURITIES LAWS (60 MARKS)
PAPER 6
ECONOMIC, COMMERCIAL AND INTELLECTUAL PROPERTY LAWS
PART I - ECONOMIC & COMMERCIAL LAWS (60 MARKS)
PAPER 7
TAX LAWS AND PRACTICE
PART I - DIRECT TAX (60 MARKS)
PART II - INDIRECT TAX (GST & CUSTOMS)
இந்த குரூப்-1 குரூப்- 2 ஆகிய இரண்டு பிரிவுகளில் உள்ள பாடங்களில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே மூன்றாம் நிலை தேர்வான ப்ரொபஷனல் புரோகிராம் (EXECUTIVE PROGRAMME) என்னும் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
3.ப்ரொபஷனல் ப்ரோக்ராம் (PROFESIONAL PROGRAMME)
இந்த தேர்விலும் குரூப்-1 குரூப்-2 ஆகிய இரண்டு பிரிவுகளில் தேர்வுகள் நடத்தப்படும்.
ப்ரொபஷனல் ப்ரோக்ராம் (PROFESSIONAL PROGRAMME) தேர்வில் வெற்றி பெற்ற ,15 மாத செய்முறை பயிற்சியை முடித்த போட்டியாளர்கள் , 'அசோசியேட் மெம்பர் ஆப் தி ஐ .சி. எஸ். ஐ "(ASSOCIATE MEMBER OF THE ICSI ) எனும் அங்கீகாரம் பெறலாம். அவர்கள் தனது பெயருக்கு முன்னால் "ஏசிஎஸ்" (ACS) என்னும் எழுத்துக்களை சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் "ஏசிஎஸ்" என்பது "அசோசியேட் கம்பெனி செகரட்டரி "என்பதை குறிக்கும். மேலும் விவரங்களுக்கு மேலும் https://www.icsi.edu எனும் இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்







