இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட் நடத்தும் படிப்புகள்: முழு விவரம்


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட் நடத்தும் படிப்புகள்: முழு விவரம்
x
தினத்தந்தி 22 Sept 2025 8:48 AM IST (Updated: 22 Sept 2025 12:11 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் சிறப்புடன் இயங்கி வருகிறது.

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட்

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் சார்பில் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கல்வி நிறுவனம் “இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட்” (INDIAN INSTITUTE OF PLANTATION MANAGEMENT- BENGALURU) ஆகும்.

பெங்களூரில் சுமார் 32 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் சிறப்புடன் இயங்கி வருகிறது. தொழிற்சாலை பங்குதாரர்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு, பல்வேறு பயிற்சிகளையும் தேவையான தகுதி மேம்பாட்டு மேலாண்மை கல்வி பயிற்சிகளையும், ஆய்வுகளையும் ,நிர்வாக ஆலோசனைகளையும் இந்த நிறுவனம் வழங்கி வருகிறது.

குறிப்பாக, வேளாண் துறையோடு இணைந்த வணிகத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டு, வாரியங்கள் , அரசு துறைகள் மற்றும் வேளாண் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகிய அமைப்புகளை மேம்படுத்தவும் இந்த அமைப்பு உதவுகிறது.

மேலும், தோட்ட தொழில் முதலீட்டாளர்கள், நில உரிமையாளர்கள் தோட்ட தொழிலாளர்கள், நுகர்வோர்கள், அரசு ,உள்ளூர் சமூகங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர்களுக்கும் இந்த பயிற்சி நிறுவனம் மிகவும் உதவியாக அமைகிறது.

இவை தவிர, உணவு வணிகம் (FOOD BUSINESS) மற்றும் வேளாண் ஏற்றுமதி (AGRI EXPORTS) ஆகியவற்றிற்கும் இந்த நிறுவனம் பேருதவியாக அமைந்து நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்குகிறது.

நிறுவனம் நடத்தும் படிப்புகள்.

1 “போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்:--அக்ரி பிசினஸ் அண்ட் பிளான்டேசன் மேனேஜ்மென்ட்” (POST GRADUATE

DIPLOMA IN MANAGEMENT : AGRI BUSINESS & PLANTATION MANAGEMENT)(PGDM-ABPM)

இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளான்டேஷன் மேனேஜ்மென்ட் என்னும் அமைப்பு “போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்:--அக்ரி பிசினஸ் அண்ட் பிளான்டேசன் மேனேஜ்மென்ட்” (POST GRADUATE DIPLOMA IN MANAGEMENT : AGRI BUSINESS & PLANTATION MANAGEMENT)(PGDM-ABPM)- என்னும் சிறப்பு வாய்ந்த படிப்பை கடந்த 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

இந்தப் படிப்பை எம்.பி.ஏ படிப்புக்கு நிகராக கருதுகிறார்கள். இந்தப் படிப்பு ஆல் இந்தியா கவுன்சில் ஃபார் டெக்னிக்கல் எஜுகேஷன் (ALL INDIA COUNCIL FOR TECHNICAL EDUCATION) (AICTE) மற்றும் நேஷனல் போர்ட் ஆஃப் அக்ரடி டேசன் (NATIONAL BOARD OF ACCREDITAION) (NBA) ஆகிய இரண்டு முக்கிய தர நிர்ணய அமைப்புகளின் சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும்.

இந்தப் படிப்பு ,வேளாண் வணிகம் மற்றும் தோட்ட தொழில் அமைப்புகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டது. இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு 100% வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உலக அளவில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்புகளில் சேரவும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த படிப்பு 24 மாதங்கள் நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பை படிப்பவர்கள் வளாகத்தில் அமைந்திருக்கும் விடுதியில் கண்டிப்பாக தங்கி இருந்து படிக்க வேண்டும். உணவு வணிகத்தில் இடம்பெறும் செயல்முறைகள், அன்றாட நடைமுறைகள், மேலாண்மை விதிமுறைகள் மற்றும் வியூகங்கள் அமைக்கும் முறைகள் ஆகியவை தெளிவாக இங்கு கற்றுத் தரப்படுகிறது.

இங்கு மாணவ மாணவிகளுக்கு மேலாண்மை திறனை அதிகரிக்கவும் பல்வேறு பயிற்சிகளை வெவ்வேறு முறைகளில் கற்றுத் தரப்படுகிறது. குறிப்பாக...

· INTERACTIVE CLASSROOM

· LECTURES

· CASE ANALYSIS

· ROLE PLAYS

· THEMATIC GROUP DISCUSSIONS

· FIELD VISITS

· WINTER PROJECTS

· SUMMER INTERNSHIP

· CORPORATE TALKS

· SESSIONS BY INDUSTRY EXPERTS

· LEADERSHIP TALKS

· LIVE PROJECTS

என பல்வேறு முறைகளில் பயிற்சிகள் வழங்கி மாணவ மாணவிகளின் திறன் மேம்பாட்டுக்கு வழிவகை செய்கிறது. இந்தப் படிப்பை முடித்தவர்களுக்கு பல நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள்.

1. பட்டப்படிப்பு தகுதிகள்.

“போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்:--அக்ரி பிசினஸ் அண்ட் பிளான்டேசன் மேனேஜ்மென்ட்” (POST GRADUATE DIPLOMA IN MANAGEMENT : AGRI BUSINESS & PLANTATION MANAGEMENT)(PGDM-ABPM)- படிப்பில் சேர விரும்புபவர்கள் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர் பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும். இந்த சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கும் பொருந்தும்.

பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படிப்பவர்களும் இந்த படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். வேளாண்மை மற்றும் அறிவியல்,(AGRICULTURE AND ALLIED SCIENCES) ,தோட்டக்கலை(HORTICULTURE), வனவியல்(FORESTRY), பட்டுப்புழு வளர்ப்பு தொடர்பான படிப்புகள்(SERICULTURE) படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

2. நுழைவுத் தேர்வு தகுதிகள்.

இந்தப் படிப்பில் சேர ஏதேனும் ஒரு "நேஷனல் லெவல் எலிஜிபில் டெஸ்ட்" (NATIONAL LEVEL ELIGIBLE TEST) தேர்வில் சிறப்பான வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

1.COMMON ADMISSION TEST (CAT)

2.MANAGEMENT APTITUDE TEST (MAT)

3.AIMS TEST FOR MANAGEMENT ADMISSIONS)(ATMA)

4. COMMON MANAGEMENT ADMISSION TEST (CMAT).

3. இட ஒதுக்கீடு

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (ECONOMICALLY WEAKER SECTION)(EWS), இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவர்(OTHER BACKWARD CLASSES )(Non-Creamy Layer) , தாழ்த்தப்பட்ட பழங்குடி இனத்தவர் மற்றும் உடல் நலிவடைந்தவர்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உண்டு

2. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்: அக்ரிகல்ச்சுரல் எக்ஸ்போர்ட் & பிசினஸ் மேனேஜ்மென்ட். (POST GRADUATE DIPLOMA IN MANAGEMENT: AGRICULTURAL EXPORT & BUSINESS MANAGEMENT).

இந்த படிப்பு இரண்டு வருட படிப்பாகும். உலக அளவில் தரம் வாய்ந்த வேளாண் ஏற்றுமதி வணிக மேலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் ஆகியோர்கள் பயன்பெறும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் உலகத்தரம் வாய்ந்த முன்னணி நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்த மேற்கொண்டு இணைந்து செயல்படுகிறது .குறிப்பாக,

· THE GERMAN AGRICULTURAL TRAINING CENTER (DEULA), NIENBURG, LOWER SAXONY, GERMANY

· THE ROYAL AGRICULTURAL UNIVERSITY (RAU), UK

· THE COMMITTEE ON SUSTAINABILITY ASSESSMENT (COSA), USA

· EUROPEAN FOUNDATION FOR MANAGEMENT DEVELOPMENT (EMFD) GLOBAL, BELGIUM

· RWANDA INSTITUTE OF COOPERATIVES, ENTREPRENEURSHIP, AND MICRO-FINANCE (RICEM), KIGALI, RWANDA

· HARPER ADAMS UNIVERSITY, NEWPORT, UK

· UNIVERSITY OF MAURITIUS

-ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த பயிற்சி நிறுவனத்தோடு இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

3. போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட்: புட் ப்ராசசிங் & பிசினஸ் மேனேஜ்மென்ட் ( POST GRADUATE DIPLOMA IN BUSINESS MANAGEMENT: FOOD PROCESSING & BUSINESS MANAGEMENT)(PGDM-FPBM).

இந்தப் படிப்பு இரண்டு வருட படிப்பாகும். உணவு பதப்படுத்துதல் மற்றும் வணிக மேலாண்மை பற்றிய பல்வேறு நுணுக்கங்களை கற்றுத் தரும் படிப்பு இது.

குறிப்பாக, உணவு தரம், பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல், உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பொருட்களுக்கான பிராண்ட் மேலாண்மை, உலக தரம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மை, உணவு சம்பந்தப்பட்ட சட்டங்கள், உணவு சம்பந்தப்பட்ட வரிகள், உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்தல், உலக அளவில் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், உணவுப் பொருடகளை தயாரிப்பதற்கான வாய்ப்புகளை கண்டறிந்து தொழில் திட்டங்களை உருவாக்குதல், வணிக திட்டங்களை முறையாக ஏற்படுத்தி உணவு வணிகத்தில் வெற்றி காண்பதற்கான வழிமுறைகளை கற்றுத் தருதல் ஆகியவை இந்த படிப்பில் பயிற்சிகளாக வழங்கப்படுகிறது.

இயக்குனர் டாக்டர். எஸ் ஜாண் மனோ ராஜ்

“இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாண்டேஷன் மேனேஜ்மென்ட் பெங்களூர்” என்ற அமைப்பின் இயக்குனராக தற்போது பணிபுரிந்து வருகிறார், தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர். எஸ் ஜாண் மனோ ராஜ். அவர்களை தொடர்பு கொண்ட போது...

"எங்கள் கல்வி நிறுவனம் தனி சிறப்பு வாய்ந்த நிறுவனம் ஆகும். இது ஒரு SECTORAL BUSINESS SCHOOL ஆகும். எங்கள் கல்வி நிறுவனத்தில் படிப்பை முடித்தவர்களுக்கு AGRI INPUT SECTOR , BANKING SECTOR, RETAIL SECTOR,FOOD PROCESSING SECTOR,AGRI CULTURAL EXPORTS, LOGISTICS AND SUPPLY CHAIN SECTOR, CONSULTANCY SERVICES போன்ற பல துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

இங்கு படித்து முடித்த பல்வேறு மாணவ மாணவிகள் உலகம் முழுவதும் மிகச் சிறப்பு வாய்ந்த பதவிகளில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சிறந்த தொழிலதிபர்களாகவும் இவர்கள் விளக்குகிறார்கள்." எனக் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு....

இந்த நிறுவனம் வழங்கும் படிப்பு பற்றிய பல்வேறு விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

INDIAN INSTITUTE OF PLANTATION MANAGEMENT BENGALURU

JNANA BHARATHI CAMPUS P.O, MALATHALLI, BANGALURU -560 056

Phone: +91-80-23212767

Email: fpbm_admissions@iipmp.edu.in/admissions@iipmb.edu.in.

Website:iipmb.edu.in.

1 More update

Next Story