அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை.. 22 காலிப்பணியிடங்கள்- யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித்தகுதி என்ன என்பதை காணலாம்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 22 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி என்ன? ஆகிய விவரங்கள் பின்வருமாறு;
பணியிடங்கள்: புராஜக்ட் அசோசியேட் 7, புராஜக்ட் அசிஸ்டென்ட் 10, புராஜக்ட் டெக்னீசியன் 5 என மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.இ.,/எம்.டெக்.,/ எம்.எஸ்சி., / பி.எஸ்சி., / டிப்ளமோ
வயது: பிரிவு வாரியாக மாறுபடும்
சம்பளம்: அதிகபட்சமாக மாதம் ரூ.24 ஆயிரம் வழங்கப்படும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director, Centre for Composite Materials (CCM), Anna University, Chennai - 600 025
கடைசிநாள்: 31.12.2025
தேர்வு அறிவிப்பினை பார்க்க: https://www.annauniv.edu/pdf/Project_Personnel_Advertisement_CCM.pdf






