பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
சென்னை,
2025-26 கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பிற்கு ஜூன் 20 தேதி முதலும், எம்.எட் படிப்பிற்கு ஆகஸ்ட் 11 முதலும் விண்ணப்பம் தொடங்கி நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு தற்போது ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே விருப்பம் உள்ளவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதி பெற பி.எட் படிப்பு அவசியமாக உள்ளது. அதன்படி, 2025-26 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பம் ஜூன் 20 முதல் தொடங்கு ஜூலை 21 வரை பெறப்பட்டது. இதற்கான தரவரிசை வெளியாகி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்தது. இதன் பிறகு 2 அரசு கல்லூரிகளில் 49 இடங்கள் மற்றும் 12 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 இடங்கள் என மொத்தம் 579 இடங்கள் இன்னும் நிராப்பப்படாமல் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு இதுவரை விண்ணப்பிக்க இயலாதவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களில் சேர்ந்து பயிலும் வகையில் மீண்டும் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கபட்டு இருந்தது.






