மத்திய அரசு நிறுவனத்தில் வேலை: என்ஜினீயர்களுக்கு அருமையான வாய்ப்பு

representation image (Grok AI)
நேஷனல் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள 248 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நேஷனல் ஹைட்ரோ எலெக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் (என்.எச்.பி.சி) நிறுவனத்தில் காலியாக உள்ள 248 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் வருமாறு:
காலி பணிகள்: 248
பதவி: அசிஸ்டெண்ட் ராஜ்பாஷா ஆபீசர், ஜூனியர் என்ஜினீயர் (சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்ப்யூனிகேஷன்), சூப்பர்வைசர் (ஐ.டி.), சீனியர் அக்கவுண்டெண்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர்
கல்வி தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி., பி.சி.ஏ., முதுகலை பட்டப்படிப்பு
வயது: 1-10-2025 அன்றைய தேதிப்படி அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 5 ஆண்டுகள் வயது தளர்வு உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு அனுமதிக்கப்படும்.
தேர்வு முறை: கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு, எழுத்து தேர்வு, ஆவண சரிபார்ப்பு.
தேர்வு மையம் (தமிழ்நாடு): சென்னை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 1-10-2025
இணையதள முகவரி: https://www.nhpcindia.com/welcome/job






