கர்நாடகா: அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்; 2 பேர் பலி

கர்நாடகாவில் ஏற்பட்ட விபத்தில் தும்கூரு சென் காவல் நிலையத்தின் உயரதிகாரி ராமகிருஷ்ணாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கர்நாடகா:  அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்; 2 பேர் பலி
Published on

தும்கூரு,

கர்நாடகாவில் இன்று 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 2 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவின் தும்கூரு தாலுகாவில் உள்ள பனாவர் அரிசி ஆலை அருகே இன்று மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்து பற்றி தும்கூரு காவல் கண்காணிப்பாளர் கே.வி. அசோக் கூறும்போது, பனவார் பகுதியருகே தும்கூரு-குனிகல் சாலையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில், தும்கூரு சென் காவல் நிலையத்தின் உயரதிகாரி ராமகிருஷ்ணாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

Also Read
டெல்லியில் அரசு பஸ்கள் 100 சதவீதம் மின்சார பஸ்களாக மாற்றப்படும்: முதல்-மந்திரி அறிவிப்பு

கர்நாடகா:  அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்; 2 பேர் பலி

அவர் மீட்கப்பட்டு, தும்கூரு சித்தகங்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் என கூறினார்.

ஹெப்புரு காவல் நிலைய பணியாளர் நவீனுடன் விபத்து பகுதிக்கு நேரில் சென்று அசோக் பார்வையிட்டார். இந்த சம்பவத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com