

புனே,
மராட்டியத்தின் புனே நகரில் நாவ்லே பாலம் அருகே நேற்றிரவு லாரி ஒன்று மற்றொரு லாரி மீதும், வாகனம் ஒன்றின் மீதும் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 12 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.