மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து புறப்பட்டார் துணை ஜனாதிபதி

மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கலந்துகொள்கிறார்.
மன்னர் 3-ம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து புறப்பட்டார் துணை ஜனாதிபதி
Published on

புதுடெல்லி,

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6-ந்தேதி (நாளை) நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.

இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் நாளை அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெற உள்ளது. இதில், அவரது மனைவி கமீலாவும் கலந்து கொள்கிறார்.

இந்த முடி சூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்திய அரசு சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கார் கலந்துகொள்கிறார். அவர் இதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று இங்கிலாந்துக்கு புறப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com