2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் தொடர்ந்து குறைந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி, 2000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டாக தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 2020 இறுதியில், புழக்கத்தில் இருந்த ரூ. 2,000 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 274 கோடியாக இருந்தது. இது புழக்கத்தில் உள்ள மொத்த கரன்சி நோட்டுகளின் எண்ணிக்கையில் 2.4 சதவீதமாகும். மார்ச் 2021 நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள மொத்த ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 245 கோடியாகவும், 2 சதவீதமாக குறைந்தும் கானப்பட்டது. ஆனால், கடந்த நிதியாண்டின் இறுதியில் மேலும் குறைந்து நோட்டுகளின் எண்ணிக்கை 214 கோடியாகவும்,1.6 சதவீதமாகவும் குறைந்தது.

மதிப்பின் அடிப்படையில், புழக்கத்தில் உள்ள மொத்த 2 ஆயிரம் ரூபாய் கரன்சி நோட்டுகளின் மதிப்பு 22.6 சதவீதத்தில் இருந்து மார்ச் 2021 இறுதியில் 17.3 சதவீதமாகவும் மேலும் மார்ச் 2022 இறுதியில் 13.8 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

இந்த அறிக்கையின்படி, புழக்கத்தில் உள்ள ரூ.500 மதிப்புள்ள நோட்டுகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 3,867.90 கோடியிலிருந்து இந்த ஆண்டு மார்ச் இறுதியில் 4,554.68 கோடியாக உயர்ந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com