

இந்தநிலையில், இதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பி.எம்.கேர்ஸ் வென்டிலேட்டருக்கும், பிரதமருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டிலுமே அளவுக்கு மிஞ்சிய பொய் பிரசாரம் காணப்படுகிறது. வென்டிலேட்டரும் தனது வேலையை செய்ய தவறிவிட்டது. பிரதமரும் தனது வேலையை செய்யவில்லை. தேவையான நேரத்தில் இருதரப்பையும் கண்டுபிடிப்பது கஷ்டம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.