மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த மாதம் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மேற்கு வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா - நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த மாதம் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் சேவை தொடங்கி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது.

இதில் ரெயிலின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. மல்டா ரெயில் நிலையத்தில் வைத்து கல் வீசப்பட்டுள்ளது. கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றர். கல் வீசப்பட்டதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com