‘‘இந்திய-வங்காளதேச எல்லையில் வேலி அமைக்கப்படுமா?’’ - மத்திய மந்திரி பதில்

இந்திய-வங்காளதேச எல்லையில் வேலி அமைக்கப்படுமா? என்பது குறித்து மத்திய மந்திரி நித்யானந்த் ராய் விளக்கமளித்துள்ளார்.
‘‘இந்திய-வங்காளதேச எல்லையில் வேலி அமைக்கப்படுமா?’’ - மத்திய மந்திரி பதில்
Published on

புதுடெல்லி,

இந்தியா-வங்காளதேசம் இடையிலான 319 கி.மீ. நீள எல்லையில் வேலி அமைக்கப்படுமா? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

அந்த எல்லை, ஆறுகள் மற்றும் கடினமான நிலப்பரப்பு வழியாக செல்கிறது. எனவே, அங்கு வேலி அமைப்பது சாத்தியம் இல்லை. இருப்பினும், ஊடுருவலை தடுக்க அந்த இடங்களின் அருகே எச்.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன், பாதுகாப்பு படையினர் படகுகளில் சென்று கண்காணித்து வருகிறார்கள். மேலும், 249 கி.மீ. நீள எல்லை பகுதியில் நிலம் கையகப்படுத்த முடியாததாலும் வேலி அமைக்க முடியவில்லை.

மேற்கு வங்காளத்தில் உள்ள சர்வதேச எல்லை, ஊடுருவலுக்கு வசதியாக போய்விட்டது. கடந்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 548 ஊடுருவல்கள் நடந்தன. அதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், எல்லை பாதுகாப்பு படையினர் பிடித்துக் கொடுக்கும் நபர்கள் மீது மேற்கு வங்காள அரசு கடும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், குறைவான நபர்களே தண்டிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com