ஒரே நாளில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதனை

நாட்டில் 11 நாட்களில் 3வது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
ஒரே நாளில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதனை
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ந்தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதன்பின்னர் கடந்த ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் இன்று செலுத்தப்பட்டு உள்ளன. கடந்த 11 நாட்களில் 3வது முறையாக இந்த இலக்கு அடையப்பட்டு உள்ளது.

இதன்படி, இந்தியாவில் இதுவரை 69.68 கோடி (69,68,96,328) கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com