டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 1 மாணவி உயிரிழப்பு - 40 பேர் காயம்

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்தார்.
டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 1 மாணவி உயிரிழப்பு - 40 பேர் காயம்
Published on

பிலாஸ்பூர்,

மணாலிக்கு சுற்றுலா சென்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு மாணவி உயிரிழந்தார். மேலும் 40 பேர் காயமடைந்தனர்.

கமலா நேரு கல்லூரியைச் சேர்ந்த 35 மாணவிகள் மற்றும் ஆறு ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட 44 பேர் பஸ்சில் பயணம் செய்தனர். இந்த நிலையில் பிலாஸ்பூர் அருகே சண்டிகர்-மணாலி சாலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்ததும் டிரைவரும் நடத்துனரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பிலாஸ்பூர் பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒருவர் பிஜிஐ சண்டிகருக்கும், 2 பேர் எய்ம்ஸ் பிலாஸ்பூருக்கும் அனுப்பப்பட்டனர். டிரைவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com