உ.பி.யை கலக்கிய குழந்தை திருட்டு கும்பல் நெட்வொர்க்...! - தட்டி தூக்கிய தமிழக சிங்கம்

உத்தரபிரதேச மாநிலத்தை கலக்கிய குழந்தை கடத்தல் கும்பலை தமிழக காவல்துறை அதிகாரி ஏஎஸ்பி சரவணன் கைது செய்துள்ளார்.
உ.பி.யை கலக்கிய குழந்தை திருட்டு கும்பல் நெட்வொர்க்...! - தட்டி தூக்கிய தமிழக சிங்கம்
Published on

லக்னோ,

வாரணாசியில் குழந்தை கடத்தல்;

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பேலக்பூர் பகுதியில் சாலையோரம் தாய் மற்றும் தந்தையுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை நள்ளிரவில் மர்ம கும்பல் ஓன்று கடத்தி சென்றுள்ளது. காலையில் கண் விழித்த பெற்றொர் குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் பெற்றொர் வாரணாசி பேலக்பூர் பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் குழந்தையை கண்டு பிடிக்க முடியவில்லை.குழந்தையை கண்டுபிடிக்க முடியாததால் வாரணாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பெற்றோரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு சிறப்பு அதிகாரியான தமிழ்நாட்டை சேர்ந்த ஏஎஸ்பி சரவணன் குழந்தையை தேடும் பணியை மேற்கொண்டார். பேலக்பூர் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தார் அதில் குழந்தையை கடத்திய கும்பல் ஒரு காரில் தப்பிச்செல்வதை பார்த்தார். இதனால் காரை தேடும் பணியை தீவிரப்படுத்தினார்.

குழந்தையை கடத்திய க்ஷிக்கா கும்பல்;

தீவிர தேடுதலுக்கு பின் காரை கண்டுபிடித்த போலீசார், குழந்தையை கடத்திய கும்பலை சேர்ந்த 10 பேரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் ஏஎஸ்பி சரவணன் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

க்ஷிக்கா என்னும் பெண்ணின் தலைமையில் இந்த கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.இந்த கும்பல் உத்தரபிரதேசம் மட்டுமின்றி பீகார்,ராஜஸ்தான்,ஜார்கண்ட் மாநிலத்திலும் கிளை வைத்து செயல் பட்டுள்ளது. வீடு இன்றி சாலையோரம் தங்கும் குடும்பம் மற்றும் போலீஸ் நிலையம் செல்ல முடியாதோர் அடையாள அட்டை இல்லாதோரை குறிவைத்து அவர்களின் குழந்தைகளை கடத்தும் சம்பவத்தில் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளது.

மேலும் அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போலீசார் அங்கு 3 மாத குழந்தை உட்பட 3 குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பிடிக்கப்பட்ட 10 கடத்தல்காரர்கள் க்ஷிக்கா தலைமையில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை கடத்தி விற்பனை செய்துள்ளனர். அதில் ஆண் குழந்தை ரூபாய் 5  லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர்களிடம் கடத்தப்பட்ட 50 குழந்தைகளையும் மீட்க விசாரனை மெற்கொள்ளப்ப்ட்டு வருகிறது.

தமிழக காவல்துறை அதிகாரி;

உ.பி.யை கலக்கிய இக்கடத்தல் கும்பலை கண்டுபிடித்த ஏஎஸ்பி சரவணன் தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர்.கடத்தல் கும்பலை சிக்கவைத்த ஏஎஸ்பி சரவணனை பல தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com