வீடு புகுந்து ரூ.1 லட்சம் நகைகள் திருட்டு

தரிகெரே அருகே வீடு புகுந்து ரூ.1 லட்சம் நகைகள் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வீடு புகுந்து ரூ.1 லட்சம் நகைகள் திருட்டு
Published on

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சபரீஷ். அவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மர்மநபர்கள் சிலர் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை திருடிவிட்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர். இதையடுத்து சபரீஷ் வீட்டிற்கு வந்தபோது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது பீரோவில் இருந்த ரூ.1.10 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் லிங்கதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com