வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் நகை திருட்டு

டி.நரசிப்புரா தாலுகாவில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான நகையை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் நகை திருட்டு
Published on

மைசூரு

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா லக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயலிங்கம்மா (வயது32). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

இந்தநிலையில் ஜெயலிங்கம்மா குடும்பத்துடன் பன்னூரில் நடந்த உறவினர் நிகழ்ச்சிக்கு சென்றார். இதனை அறிந்த மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்றனர்.

பின்னர் ஜெயலிங்கம்மா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ள சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 22 கிராம் தங்க நகையை காணவில்லை.

அதனை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயலிங்கம்மா பன்னூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com