பாலியல் தொல்லையை எதிர்த்த மாணவிகள் மீது கொடூரத் தாக்குதல்! 10 பேர் கைது

பீகாரில் பாலியல் தொல்லையை எதிர்த்த மாணவிகள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 10 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
பாலியல் தொல்லையை எதிர்த்த மாணவிகள் மீது கொடூரத் தாக்குதல்! 10 பேர் கைது
Published on

பாட்னா,

பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட சில சிறுவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த 30 பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் நடந்த கொடூர சம்பவம் பிஹார் மாநிலத்தில் நடந்துள்ளது.இதில் பல மாணவிகள் ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பீகாரின் சூபால் மாவட்டம் தபார்காவில் பெண்களுக்கான கஸ்தூர்பாய் காந்தி உண்டு உறைவிடப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உள்ளூர் இளைஞர்கள், சிறார்கள் பாலியல் தொல்லையை கொடுத்துள்ளனர். இப்படி வழக்கமாக செய்யும் உள்ளூர் இளைஞர்கள், மாணவிகளை பற்றி மோசமாக பள்ளியின் மதில் சுவற்றில் எழுதிவைத்துள்ளனர். இதுபற்றி ஏற்கெனவே பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் தெரிவித்தும் எந்தஒரு நடவடிகையும் எடுக்கவில்லை. இதனையடுத்து மாணவிகளே இதுபோன்ற செயலை செய்யாதீர்கள் என கண்டித்துள்ளனர். ஆனால் உள்ளூர் இளைஞர்கள், சிறுவர்கள் வீட்டில் உள்ளவர்களை அழைத்துவந்து மாணவிகளை கொடூரமான முறையில் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் மாணவிகளில் பலர் பலமாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் இதுதொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்த நிலையில் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 10 பேரை கைது செய்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com