கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு 10 பேர் உயிரிழப்பு

கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு 10 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் கடந்த 10 நாட்களில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு 10 பேர் உயிரிழப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஏராளமானவர்கள் உள்ளாகி வருகின்றனர். அதன்படி, பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் கடந்த 10 நாட்களில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்த 10 பேர் தங்களது உயிரை பறி கொடுத்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் கடநத 10 நாட்களில் மாநிலத்தில் புதிதாக யாரும் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு உள்ளாகவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு இதுவரை 451 பேர் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக 3,878 பேர் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மாநிலத்திலேயே பெங்களூருவில் தான் அதிகஅளவுக்கு கருப்பு பூஞ்சைக்கு பாதிக்கப்பட்டு இருப்பதும், பலியாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் இதுவரை 1,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 153 பேர் கருப்பு பூஞ்சைக்கு பலியாகி இருப்பதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com